Ads Area

மட்டக்களப்பு கிறிஸ்தவ மத போதகரின் மரணச் சடங்கில் நிகழ்ந்த “மத நல்லிணக்கம்“

அண்மையில் பாம்புக் கடிக்கு இழக்காகி மரணமடைந்த அருட்தந்தை செட்ரிக் ஜுட் ஒக்கர்ஸ் அடிகளாரின் நல்லடக்கம் ஆயிரக் கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் இன-மத-மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களும் அருட்தந்தை ஜுட் ஒக்கர்ஸ் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியமை மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

இன-மத பாகுபாடின்றி அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பழக் கூடிய அருட்தந்தை ஜுட் ஒக்கர்ஸ் அவர்கள் மட்டக்களப்பு கூலாவடி புதுமைப் புறம் பங்கைப் பிறப்பிடமாகக் கொண்டவராவர்.

அருட்தந்தை அவர்கள் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனைப் பங்கில் உதவிப் பங்குத் தந்தையாக பணியாற்றி பின்னர் சில காலமாக மட்டக்களப்பு சத்துறக் கொண்டான் எவன் எஸ்டேட் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.


இந் நிலையில் கடந்த சனிக் கிழமை காலை எவன் எஸ்டேட்  பகுதியில் உள்ள மின் கம்பத்தில் பொறுத்தப்பட்ட மின் விளக்கினை அணைப்பதற்கு சென்ற வேளையில் புடையன் பாம்புக் கடிக்கு உள்ளான அருட்தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe