Ads Area

மன்னார் மனிதப் புதைகுழி கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை.

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவைத் தளமாகக் கொண்ட பீட்டா நிறுவனம் மேற்கொண்ட கார்பன் பரிசோதனை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான கார்பன் பரிசோதனை அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்துள்ளது.

மன்னார் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கை பகிரங்க ஆவணம் என்பதால், விரும்பியவர்கள் விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்கனவே நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மன்னாரில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் சதொச கட்டடம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட காணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என்பதைக் கண்டறியும் பகுப்பாய்விற்காக 6 மாதிரிகள் பீட்டா அனலைசிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அனுப்பி வைக்கப்பட்ட 6 மாதிரிகளில் 5 மாதிரிகளின் அறிக்கை  கடந்த 15 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது. தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe