Ads Area

எனது குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டேன்; கதறிய தாய் நடுவானில் சம்பவம்.

சவுதி அரேபியாவில் தாய் ஒருவர் தனது குழந்தையை விமான நிலைய காத்திருப்புப் பகுதியில் ஞாபக மறதியில் மறந்து போய் விட்டு விட்டு விமானத்தில் பயணம் செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Flight SV832 என்ற இலக்க சவுதி அரேபிய விமானம் சவுதி அரேபியா ஜித்தாவில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்டு பறந்து கொண்டிருந்த வேளை திடிரென பெண்னொருவர் தனது குழந்தையை  விமான நிலையத்தில் மறந்து போய் விட்டு விட்டு வந்ததாகவும் உடனடியாக விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்பும் படியும் விமானியிடம் கதறியழுதுள்ளார்.

உடனே விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்பு கொண்டு குறித்த விடையம் தொடர்பாக தெரிவித்து விமானம் மீண்டும் ஜித்தா விமான நிலையம் வந்து அந்த தாய் தனது குழந்தையைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி மூலம் - gulfnews
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe