Ads Area

சாய்ந்தமருதில் மு.கா அதிகாரிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாய்ந்தமருதில் மு.கா கூட்டம் குழப்பப்பட்டது ஏன் ? இது அல்லாஹ்வின் தண்டனையா ? அங்கு கட்சியில் இணைவதற்கான தகுதி என்ன ?

சாய்ந்தமருதில் நேற்று இரவு முஸ்லிம் காங்கிரசின் வட்டார புனரமைப்பு என்ற போர்வையில் ஓர் கூட்டம் நடந்ததாகவும், அது குழப்பபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. நான் பிறந்து வாழ்கின்ற குறித்த எனது வட்டாரத்தில் நடைபெற்ற குறித்த கூட்டம் குழப்பப்பட்ட செய்தி வெளியானதன் பின்புதான் இவ்வாறான கூட்டம் நடைபெற்றதை அறியக்கூடியதாக இருந்தது.

அவ்வாறாயின் இந்த கூட்டம் யாருக்கு ? இதுக்கு பெயர்தானா கட்சி புனரமைப்பு ? அண்மையில் சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் அவரது கட்சி புனரமைப்பு கூட்டங்கள் நடைபெற்ற போது அதனை யாரும் குழப்பவில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசின் கூட்டம் நடைபெற்றால் மட்டும் ஏன் குழப்பப்படுகின்றது ?

சாய்ந்தமருதில் மு.கா அதிகாரிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனரஞ்சகம் இல்லாத சுயநலவாதிகளின் கைகளில் கட்சி அதிகாரம் இருக்கின்றதுதான் இதற்கு காரணமாகும். அத்தோடு இந்த கூட்டத்தை குழப்பியவர்களும் முஸ்லிம் காங்கிரசின் தீவிர போராளிகளாக இருந்து ஓரம்கட்டப்பட்டவர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.

சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் எழுதப்படாத ஓர் சட்டம் உள்ளது. அதாவது குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போன்று குறித்த ஒரு சிலரது கைகளில் கட்சியின் அதிகாரம் உள்ளது. இவர்களது விருப்பத்தை மீறி முஸ்லிம் காங்கிரசுக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அவ்வாறு தலைவர் மூலமாக யாராவது கட்சிக்குள் உள்வாங்கப்பட்டால் எப்படியாவது வெட்டிக் குத்தி குதறி வெளியேற்றி விடுவார்கள்.



அவ்வாறாயின் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசில் இடம் கிடைப்பதென்றால் என்ன தகுதி வேண்டும் ? சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசின் அதிகாரம் யாருடைய கைகளில் உள்ளதோ அவர்களது குடும்ப உறவினர்களாக இருக்க வேண்டும் . அவர் தூரத்து சொந்தமாக இருந்தாலும் பருவாயில்லை.

அத்தோடு தலைவருடன் தொடர்பு இருக்க கூடாது. அரசியல் அறிவு இருக்க கூடாது. நியாயத்தை தட்டிக்கேட்டு விவாதிக்க கூடாது. மார்பை நிமிர்த்தி நடக்க கூடாது. அதிகாரிகள் எதனை பேசினாலும் வாய்மூடி மௌனியாக இருப்பதுடன் “ஆமாம் ஆமாம்” என்று கூறுவதற்கு மட்டும் வாயை திறக்க வேண்டும்.

தாங்கள் கட்சியின் மூலமாக எதனை அனுபவித்தாலும் அதனை யாரும் கண்டுகொள்ளக்கூடாது. சுருக்கமாக கூறப்போனால் ஓர் அடிமயாக அல்லது பாமரமகனாக மட்டும் இருத்தல் வேண்டும்.  அதாவது பிரமுகராக இருக்க கூடாது.

எனவேதான் இவர்கள் அல்லாஹ்வை மறந்ததுடன், எப்போதாவது மரணிக்க வேண்டியவர்கள் என்ற எண்ணம் துளியளவும் இவர்களிடம் இல்லை. அதனால் தாங்கள்தான் கட்சியின் காவலர்கள் என்று போலி வேஷம் போடுகின்ற இவர்களை அல்லாஹ் தண்டிக்கின்றான்.

அதாவது நாங்கள் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும். வேறு திறமையானவர்கள் யாரும் இந்த கட்சியில் வந்துவிட கூடாது என்று நினைத்து கட்சியை அழித்து வருகின்ற இவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் தண்டனைதான் தண்டனைதான் தொடர்ந்து கூட்டம் குழப்பப்படுவதாகும்.

மற்றவர்களுக்கு இவர்கள் சதி செய்ய, இவர்களுக்கு அல்லாஹ் சதி செய்கின்றான்.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe