அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெக் றிஸ்வி முப்தி அவர்கள் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தற்கொலைக் குண்டுதாரிகளின் சடலங்களை எந்தவொரு முஸ்லிமும் பொறுப்பேற்க வேண்டாம் என்றும் எதிர்வரும் ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ சகோதரர்கள் எந்தவொரு அச்சமும் இன்றி தமது வழிபாடுகளில் ஈடுபடுமாரும் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
"ශ්රී ලාංකික මුස්ලිම්වරු හැටියට මෙම ත්රස්තවාදීන්ගේ මළ සිරුරු අපි භාරගන්නේ නැහැ"