முஹம்மட் றிஸ்விகான்.
வீடு கட்ட முடியாமல் கஸ்டப்படுகின்ற ஏழை மக்களின் நன்மை கருதி அவர்களுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இனைத்தலைவருமான கௌரவ உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களின் முயற்சியின் பயனாக ஆரம்பித்திருக்கும் வீட்டு திட்டதின் சென்னல் கிராமம் 1, 2 ஆகிய கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அமைப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் நிகழ்வு 2019/05/16ம் திகதி சென்னல் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.