வன்முறைகளால் நமக்கென்று இருக்கும் இச் சிறிய நாட்டை சீரழித்து விடாதீர்கள்.
எமது எதிர்கால சந்ததியினருக்கு மோசமான அனுபவங்களை வழங்காதிருப்போம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளிலும் நேற்று(திங்கட்கிழமை) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எமக்கென்ற ஒரு நாடாக விளங்குவது இச்சிறிய நாடு மாத்திரமே. வன்முறைகளால் இந்நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இலங்கையர்களாக எமக்கே அது பலவீனமாகும்.
பல வருடங்களாக பல்வேறு வன்முறைகளுக்கு முகங்கொடுத்து, அதன் ஊடாக படிப்பினைகளைப் பெற்றுக்கொண்ட நாம், எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மோசமான அனுபவங்களை வழங்காதிருப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.