பெறோஸ் முஹம்மட்.
இச்சந்திப்பின்போது, கடந்த மாகாண சபை ஆட்சியின்போது நடைமுறைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட வேலைத் திட்டமான “ஐ ரோட் (I Road)” வேலைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆட்சிக் காலத்தின்போது மாகாண சபையினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டமாகிய “Integrated Road Investment Programme” எனப்படும் “ஐ ரோட் (I Road)” வேலைத் திட்டம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு வேலைகள் எதிர்வரும் ஜூலை மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 221.28 கி.மீ. நீளமான வீதியை காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கமைவாக குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீதிகளைத் தெரிவு செய்வது தொடர்பான கூட்டம் முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் அவர்களின் தலைமையில் கடந்த 10.05.2016ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், பிரதேச சபைகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இதற்கமைவாக கடந்த 18.05.2016ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட BT/RACLG/IRP/2016 இலக்க கடிதத்திற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் மேற்குறிப்பிட்ட பிரிவுகளிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட வீதிகள் அனைத்தும் ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது.
இதன் பிரகாரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக 20.03.2017ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதம உதவிச்செயலாளர் V. மகேந்திரராஜா அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட EP/08/PL/I Road/2017 இலக்க கடித்திற்கமைவாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஐ ரோட் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனடிப்படையில்
காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, மண்முனை வடக்கு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பின்வரும் வீதி அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் ஜூலை அளவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
காத்தான்குடி
0. கடற்கரை கடலோர வீதி - 1.8 கி.மீ.
0. டெலிகொம் வீதி - 1.09 கி.மீ.
0. முஹைதீன் பெரிய ஜும்மா பள்ளி வீதி 1.07 கி.மீ.
0. விடுதி வீதி - 0.51 கி.மீ.
0. டீன் வீதி - 1.59 கி.மீ.
0. பெண்கள் சந்தை வீதி (புதிய காத்தான்குடி மத்திய வீதி) - 0.49 கி.மீ.
0. அப்றார் வீதி - 0.54 கி.மீ.
0. ஆற்றங்கரை வாவிக்கரை வீதி பகுதி i - 1.79 கி.மீ.
0. கர்பலா பாலமுனை வீதி - 3.02 கி.மீ.
பாலமுனை
0. பாலமுனை பிரதான வீதி - 1.21 கி.மீ.
0. மீரா ஜும்மாபள்ளி வீதி - 0.47 கி.மீ.
காங்கேயனோடை
0. காங்கேயனோடை - ஒல்லிக்குழம் - மாவிலங்குதுறை வீதி 2.75 கி. மீ.
0. காங்கேயனோடை பிரதான வீதி ஆரையம்பதி 0.84 கி.மீ.
மட்டக்களப்பு மாநகரசபை
0. பூனொச்சிமுனை வீதி (பிள்ளையார் கோவில் முன்பாக) - 0.85 கி.மீ.
0. புதிய பாலமுனை வீதி - 1.28 கி.மீ.
0. ஹிஸ்புல்லாஹ் வீதி மஞ்சந்தொடுவாய் பகுதி i உம் ii உம் - 0.96 கி.மீ.