மோட்டர் சைக்கிள்களில் உள்ள முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருந்து வரும் மோட்டர் சைக்கிள்களின் டயர்களாகும். உங்கள் மொத்த மோட்டர் சைக்கிளையும், அதிக ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றி கொள்ள டயர்களை சோதனை செய்வதும், பராமரிப்பதும் முக்கியமாகும். தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாத டயர்கள், உங்கள் வாழ்க்கைகே ஆபத்தாக முடிய வாய்ப்பாகி விடும்.
இது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள என்றும் சம்மாந்துறை24 முகநுால் பக்கத்தோடு இணைந்திருங்கள் - https://www.facebook.com/Sammanthurai24News/
டயர்களை சோதனை செய்வது ஏன் முக்கியமாக உள்ளது
டயர்கள் ரப்பர் மூலம் உருவாக்கப்படுவதால், மோட்டார் சைக்கிள் ஓடஓட தொடர்ந்து தேய்ந்து கொண்டே இருக்கும். மார்க்கெட்டில் பல்வேறு வகையான டயர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இருந்தபோதும், மோட்டார் சைக்கிள் டயர்களை எப்படி சோதனை செய்வது மற்றும் பரமாரிப்பு செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
உங்கள் மோட்டார் சைக்கிள் சாலையில் செல்லும் போது இரண்டு டயர்கள் மூலமே பேலன்ஸ் செய்யப்படுகிறது. ஆகையால் சரியான அளவில் டயர்கள் பொருத்துவது, பாதுகாப்பான மற்றும் ஸ்மூத்தான பயணத்தை உறுதி செய்யும்.
உங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை எப்படி சோதனை செய்வது?
டயர்களின் டிரிட்களை கவனிக்க வேண்டும்
மோட்டர் சைக்கிள் டயர்களை சரியாக கவனித்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் டயர்களில் உள்ள டிரிட்கள், சாலையில் பயணம் செய்யும் போது சரியாக கிரிப் கிடைக்கும். டிரிட்களை சரியாக இல்லாத டயர்கள் கொண்ட மோட்டர் சைக்கிள்களில் பயணம் செய்யும் போது, சரியான கிரிப் கிடைக்காமல் போய், விபத்துகள் ஏற்படுத்த வாய்ப்புண்டு.
டிரிட்கள் வருவதற்கு முன்பே டயர்களை மாற்ற வேண்டும்
மோட்டர் சைக்கிள் டயர்கள் பொதுவாக 1/32 இன்ச் அளவு டிரிட் செய்யப்பட்டிருக்கும் என்பதால், இந்த அளவு முழுமையாக குறைவதற்கு முன்பே டயர்களை மாற்றி விடுவது நல்லது என்று டயர் பாதுகாப்பு நிபுணர்கள் வலியுத்தியுள்ளனர்.
பழைய காலத்தில் டயர்களின் டிரிட்களை தெரிந்து கொள்ள காயினை பயன்படுத்தி அளவீடு செய்வார்கள். தற்போது இதற்கு என தனியாக இன்டிக்கேட்டர் வந்து விட்டது. உங்கள் டயரின் டிரிட்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள டிரிட் இன்டிகேட்டரை பயன்படுத்தி, டிரிட்டின் அளவை அளந்து கொள்ள வேண்டும்.
எப்போதெல்லாம் உங்கள் டயரில் தேய்மானம் ஏற்படும்?
அதிவேகமாக செல்லும் போது பிரேக் பிடிப்பது, ஈரமான சாலைகளில் பைக்களில் வேகமான செல்வது போன்றவை பைக்கின் டயர்களை பாதிக்கும். இதனால் பைக்கில் தேய்மான உண்டாகும். அதிகளவு தேய்மான கொண்ட டயர்களுடன் பைக்கை ஒட்டி செல்வது, பாதுகாப்பான பயணத்தை அளிக்காது. இந்த டயர்கள் கொண்ட பைக் பயணத்தில் உங்கள் கட்டுபாட்டை இழக்க நேரிடும்.
இதுகுறித்து முன்னணி நிபுணர்கள் தெரிவிக்கையில், பைக்களின் முன்புற டயரை விட, பின்புற டயர்கள் அதிகளவில் தேய்மான ஆகும். இதனால் பின்புற டயர்களை சரியாக கவனித்து மாற்றி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
டயர்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்?
டயர்கள் தயாரிக்கும் போது, சில கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த கெமிக்கல்களில் மாற்றம் ஏற்படும் வரை டயர்கள் நன்றாகவே இருக்கும். பொதுவாக இந்த கெமிக்கல் மாற்றங்கள் நிகழ ஐந்து ஆண்டுகள் தேவைப்படலாம். இதனால் நீங்கள் உங்கள் பைக்கின் டயர்களை ஐந்தாவது ஆண்டில் மாற்றுவது சிறந்ததாக இருக்கும். இலையென்றால், இந்த டயர்களின் ஏற்படும் கெமிக்கல் மாற்றங்களால், சாலையில் பயணம் செய்யும் போது கிரிப் குறைந்து, சறுக்கி விழ வாய்புகள் உள்ளது.
டியூப்களையும் பராமரிக்க வேண்டும்
டயர்களை எப்படி பராமரிக்க வேண்டிய அவசியமோ, அதேபோன்று டியூப்களையும் பராமரிக்க வேண்டும். தற்போது எல்லா டயர்களிலும் டியூப்கள் பொருத்தப்படுவதில்லை என்றபோது, பொரும்பாலான டயர்களில் டியூப் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு முறை டயர்களை மாற்றும் போதும், டியூப்களை மாற்றி விடவது சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் டியூப் காற்று நிரப்புவதற்கு ஏற்ப விரிவடைந்து, சுருக்கி, டயர்களுக்கு மாற்றத்தை கொடுத்து வருகிறது. இதனால், இதில் ஆபத்தான வெடிப்புகள் எதுவும் உண்டாக வாய்ப்புள்ளது.
இது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள என்றும் சம்மாந்துறை24 முகநுால் பக்கத்தோடு இணைந்திருங்கள் - https://www.facebook.com/Sammanthurai24News/
இது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள என்றும் சம்மாந்துறை24 முகநுால் பக்கத்தோடு இணைந்திருங்கள் - https://www.facebook.com/Sammanthurai24News/
டயர்களின் அழுத்ததை செக் செய்ய வேண்டும்
உங்கள் பைக்கின் டயர்களின் அழுத்ததை தொடர்ச்சியாக செக் செய்ய வேண்டும். ஏனென்றால் டயர்களில் காற்றும் நிரப்பும் போதும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரப்பி விட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் பைக்கின் டயர்களில் காற்று நிரப்பும் போது கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட அளவில் மட்டுமே காற்றை நிரப்ப வேண்டும். அதிக அழுத்தம் கொண்ட காற்றை நிரப்புவதால், பயணத்தின் போது டியூப்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.