கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று புகைப்படம் எடுத்து கைதான முஹம்மத் ராபிதீன் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சியால் பிணையில் விடுதலை.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் என்று சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) நேற்று கைது செய்யப்பட்டு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
ஒரு வருடங்களுக்கு முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தான் ஒரு நிர்மாணப் பணியொன்றைச் செய்ததாகவும் தன்னால் பூர்த்தி செய்யப்பட்ட பணியினை புகைப்படம் எடுத்ததாகவும் அதனை அவதானித்த சிலர் சந்தேகம் கொண்டு தன்னை தாக்க வந்ததாகவும் ராபிதீன் குறிப்பிட்டார்.
இவருக்காக இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான இயாஸ்தீன் இத்ரீஸ்,சுஹால்ஸ் பிர்தௌஸ், இன்னும் சில சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜரானார்கள்.
மேலும் இந்த வாதத்தில் உள்ள நியாயமான தன்மையை கௌரவ நீதிவானுக்கு குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் எடுத்து கூறி குறித்த சந்தேக நபருக்கு பிணை வேண்டி நின்றனர்.
இந்த வாதத்தில் உள்ள நியாயமான தன்மையை அவதானித்த நீதவான் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்கி தீர்ப்பளித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் பல குரலற்ற அப்பாவிகளுக்கு சட்ட உதவிகளை குரல்கள் இயக்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது.