செ.மு. ஜெலீஸ்.
தமிழா ஊடக வலையமைப்பானது கலை இலக்கிய மற்றும் நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் பல் துறை சார்ந்தவர்களை ஊக்குவித்து விருது வழங்கி கௌரவித்து வருவதோடு மட்டும் மல்லாமல் பல்வேறு பட்ட மனிதநேய சமூகப்பணிகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் அமைப்பின் சமூக வலுவூட்டல் பிரிவானது பொது இடங்களில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அவதானித்து வந்தது.
இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் அமைந்துள்ள செந்நெல் கிராமம்-01 இல் இயங்கி வரும் கர்ப்பிணித் தாய்மாரின் சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பரிசோதனைக்காக வரும் தாய் மார்களுக்கு கழிவறை வசதிகள் காணப்படாமையினை அவதானித்த தமிழா ஊடக வலையமைப்பு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இரண்டு கழிவறைகளை நிர்மாணிப்பதற்கும், சூழல் பசுமைத் திட்டத்தின்கீழ் மரம் நடுவதற்குமான அனுமதி கோரல் கடிதத்தினை சென்ற 17.06.2019 இல் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ. முகம்மட் கபீர் அவர்களிடம் தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும். வித்யாசாகர் கல்வி இலக்கிய கலாசார பன்னாட்டுக் கலை மன்றத்தின் தலைவருமான செ.மு. ஜெலீஸ் அவர்கள் கையளித்திருந்தார்.
மேற்படி வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்ததன் காரணமாக தற்போது செந்நெல் கிராம கர்ப்பிணித் தாய்மாரின் சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கழிவறைகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
மேற்படிப் பணிகள் வித்யாசாகர் கல்வி இலக்கிய கலாசார பன்னாட்டுக் கலை மன்றத்தின் போசகரும். தென்னிந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாடலாசிரியருமான “கவிவேந்தர்" உயர்திரு. வித்யாசாகர் ஐயா அவர்களின் சொந்த நிதியில் தற்போது கழிவறைகள் கட்டுமாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.