துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த குப்பைகளைக் கண்டறிந்த கம்போடிய அதிகாரிகள், அந்தந்த நாடுகளுக்கே அவற்றைத் திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சில நாடுகள் இறக்குமதி செய்யாமல் திருப்பி அனுப்பி வருகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் தற்போது கம்போடியாவும் சேர்ந்திருக்கிறது.
கம்போடியாவின் தென்மேற்குத் துறைமுகமான சிஹானோக்வில்லேவில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்தம் 83 கன்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைக் கண்டுபிடித்து திறந்து பார்த்தபோது, சுங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் என பெயரிடப்பட்டு பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்தன.
இவற்றின் மொத்த எடை மட்டும் 1,600 டன். 83 கன்டெய்னர்களில் 70 கன்டெய்னர்கள் அமெரிக்காவையும், 13 கன்டெய்னர்கள் கனடாவையும் சேர்ந்தவை. அவை அனைத்தையும் கண்டறிந்த அதிகாரிகள், அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கம்போடியா அரசு, ``இது வெளிநாடுகளின் குப்பைத்தொட்டி அல்ல என்பதை மற்ற நாடுகள் மனதில் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறது.
பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாறிவரும் ஆசியா http://www.sammanthurai24.com/2019/07/bio-medical-waste-sri-lanka.html