காத்தான்குடியில் ஷரியா சட்டத்தால் 20 பேர் கொல்லப்பட்டதாக கருத்து தெரிவித்த தேரர் மீது விசாரனை.
ஷரியா சட்டத்தின் ஊடாக 20 பேரை கொலை செய்ததாக மெதகொட அபேதிஸ்ஸ தேரர்தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்துக்கு இரகசிய தகவல் வழங்கியமை, விபச்சாரம் செய்த பெண்கள் , சூதாட்டத்தில் ஈடுபட்டமை, பொலிஸாருக்கு நிதி வழங்கியமை ஆகிய காரணங்களுக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த முஸ்லிம் நபர் தகவல் வழங்கியுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.
வஹாப் அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்போம் என்ற பெயரில் நுகேகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.