Ads Area

கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளிப் பழம் சாப்பிடலாமா..?? அதிகமானோரின் சந்தேகம்.

கர்ப்ப காலத்தில் எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது. என்று சொல்வதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்கப் போகும் பெண்களின் வாழ்வில் இந்த விசயம் கண்டிப்பாக நடந்திருக்கும். ‘எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது.’ என்ற பயமுறுத்தும் வார்த்தைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் கடந்திருக்காமல் இருக்கவே முடியாது.

இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான்.

இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குளிர்ச்சி தன்மையான உணவுகளைச் சாப்பிடும் பொழுது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. பப்பாளி சூடு தன்மையான உணவுப் பட்டியலில் சேர்க்கிறது. அதனாலேயே கர்ப்ப காலங்களில் பப்பாளி பழங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.

உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.

கர்ப்பகாலத்தின் முதல் நிலையில் இருக்கும் பெண்கள் இந்த வகை பப்பாளிகளைச் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதை எடுத்துக்கொள்வதால் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பை சுருங்கி விரிய துணைபுரிகிறது. இதனால் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் நிறைய பலன்கள் ஏற்படுகின்றன என்பது உண்மை.பல கர்ப்பிணிப் பெண்கள் இதை முயன்று பலன் அடைந்து உள்ளனர்.இதில் நிறைந்துள்ள சத்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கனிந்த பப்பாளி பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை தொல்லையைத் தவிர்க்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் , மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றுகின்றது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe