Ads Area

மாகாணமட்ட போட்டிக்கு செல்லவுள்ள சம்மாந்துறை தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட அணி.

சம்மாந்துறை தேசிய பாடசாலையின்  16, 18, மற்றும் 20 வயதிற்கு கீழ் உள்ள மூன்று உதைப்பந்தாட்ட அணிகளும் இம்முறை எதிர் வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள மாகாணமட்ட போட்டிக்கு செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

குறிப்பு - சம்மாந்துறையில் பல திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இருந்தும் அவர்கள் எந்தவித ஊக்கமளிப்புக்கள் இல்லாமலும், அவர்களுக்கான பயிற்சிகளுக்கு சிறந்த விளையாட்டு மைதானம், விளையாட்டுப் பொருட்கள், சிறந்த வழிகாட்டல்கள் இல்லாமலும் சிரமமப்பட்டு வருகின்றார்கள்.

பாடசாலை ரீதியிலும், விளையாட்டுக் கழகங்கள் ரீதியிலும் சிறந்த விளையாட்டு வீரர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களை செய்து கொடுத்து தேசிய-சர்வதேச ரீதியில் அவர்கள் சாதனை படைக்க சம்பந்தப்பட்டவர்கள் கரிசனை கொள்ள வேண்டும் என சமமாந்துறை24 இணையத்தளம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe