பதுளை – ஹாலிஎல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 11 மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 44 வயதான சந்தேகநபர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.