அண்மையில் எமது அட்டாளைச்சேனையில் பல உள்ளக வீதிகள் காபட் வீதிகளாக போடப்பட்டுள்ளமை மிகவும் சந்தோசமான விடயமாகும் இதற்கு தூண்டுகோளாக இருந்த அரசியல்வாதிகளை இவ்விடத்தில் பாராட்டியே ஆகவேண்டும்.
இருப்பினும் இவ்வாறாக போடப்பட்ட காபட் வீதிகளின் தரம் எத்தகையது அதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் தரம் எவ்வாறானது என்பது பரீட்சீக்கப்பட்டதா?
இவ் வேலைக்கான ஒப்பந்த்த்தை பெற்றுக் கொண்டவர்கள் சரியான முறையில் வேலைகளை முடித்துள்ளனரா? என்பது பற்றி வினாவும் எழுகின்றது இதற்கு பொறுப்பாகவுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் சரியான முறையில் மேற்பார்வை செய்துதான் இவ் வேலைகள் நடைபெற்றதா என்பன இங்கு ஆராயப்படவேண்டிய விடயங்களாகும்.
வீதியோரத்தில் பல மோட்டார் சைக்கிள்கள் Stand இல் நிறுத்தி வைக்கப்பட்ட போது அந்த Stand காபட்டினுள் புதைந்து கீழே விழுந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் இங்கு காணப்படுகின்றன.
எனவே இங்கு யாரின் பிழை நடந்துள்ளது என்பது அறியப்படவேண்டிய ஒரு விடயமாகும். எனவே இதற்கு பொறுப்பானவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்.