நீங்கள் சாப்பிடும் முட்டையில்" மஞ்சள் கருவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் , அது ஆரோக்கியமான கோழியிலிருந்து வந்ததா இல்லை பிராய்லர் கோழியிடமிருந்து வந்ததா என. முட்டை நல்லது என சிறு வயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் அதிலேயும் கலப்படம், ஹார்மோன் ஊசி என மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர் இன்றைய வணிகஸ்தர்கள்.
ஆரோக்கியத்தையும் எப்போது வணிகம் செய்ய ஆரம்பித்தனரோ அப்போதிருந்து ஆரம்பித்துவிட்டது நமது ஆரோக்கியத்திற்காக கேடு காலம். சாப்பிடும் அரிசியிலிருந்து குடிக்கும் நீர் வரை எல்லாவற்றிலும் ஆபத்து என்றால் எதைத்தான் பின் சாப்பிடுவது என நமக்கு பலக் கவலைகள் சூழ்கின்றன.
ஏழைக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை என பள்ளியில் வழங்கப்பட்டதற்கு காரணமே அதன் சத்துக்கள் வளரும் பிள்ளைகளுக்கு சேர வேண்டும் என்பதால்தான். ஆனால் அந்த முட்டைகள் இன்று வெறும் விஷமாகி மாறிப் போகின்றது என்றால் அது எத்தனை துயரமானது. முட்டை எங்கிருந்து பெறப்படுகிறதென்றால் கோழி. அந்த கோழி ஆரோக்கியமானதா என்று கேட்டால் இல்லை.. ஏனென்றால் ப்ராய்லர் கோழிகளை வளர்க்க விட்டு ஸ்டீராய்டு ஊசி மூலம் முட்டைகளைப் பெறச் செய்து அதனை மிகப்பெரிய வணிகமாகிவிட்டோம்.
சரி. எப்படி நல்ல முட்டையை கண்டுபிடிப்பது என நீங்கள் யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது தொடர்ந்து படியுங்கள்.
உங்களுக்காக ஒரு பரிசோதனை :
ரிசல்ட் :
இந்த மூன்று முட்டைகளின் மஞ்சள் கருவையும் பிரித்தெடுங்கள். பின்னர் மூன்றின் நிறத்தையும் பாருங்கள். லோக்கல் மார்க்கெட் மஞ்சள் கருவின் நிறம் - மஞ்சள் சூப்பர் மார்கெட் முட்டையில் மஞ்சள் கருவின் நிறம் - மஞ்சள். நாட்டுக் கோழி முட்டையின் மஞ்சள் கரு- ஆரஞ்சு. இதில் எந்த நிறமான மஞ்சள் கரு நல்லது தெரியுமா? ஆரஞ்சு. . ஆரஞ்சு நிற மஞ்சள் கரு இருந்தால் அந்த முட்டை ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்... ஏன்?
ஏன் ஆரஞ்சு நிறம் நல்லது? :
முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரியான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து , சூரிய வெளிச்சம் பெற்று இயற்கையான முறையில் அவை வளர்வதால் அவ்ற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். எனவே நீங்கள் வாங்கிய முட்டையில் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் தொடர்ந்து அதே கடையில் அதே முட்டையை வாங்குங்கள்.
வெளிர் ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லதா?:
மஞ்சள் இல்லாமல் சில முட்டைகளின் மஞ்சள் கரு வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அவைகள் நல்லதா என உங்களுக்கு சந்ததேகம் வரலாம். ஆமாம். அவைகள் மஞ்சள் நிற மஞ்சள் கருவை விட பெட்டரானவை என்று சொல்லலாம் . ஆகவே இவையும் தப்பில்லை சாப்பிடலாம்.
ஆர்கானிக் முட்டை :
இந்த வெளிர் ஆரஞ்சு நிற முட்டைகளை ஆர்கானிக் முட்டை எனலாம். காரணம் இவைகள் முற்றிலும் இயற்கையான சூழ் நிலையில் வளர்ந்தவை. குறிப்பிட்ட பண்ணைகளிலும், நல்ல இயற்கை தீவனம் மட்டும் போட்டு தீவனமும் போட்டும் வெளி வட்டார பகுதிகளிலும் வளரச் செய்தவை. ஆகவே அவை வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. இவற்றை சாப்பிடலாம் . உடலுக்கு கேடு இல்லை.
மஞ்சள் நிற மஞ்சள் கரு தீமையா?
ஆமாங்க. மஞ்சள் நிறத்தில் முட்டையின் மஞ்சள் கரு இருந்தால் அது நல்லதல்ல. அவை முற்றிலும் முட்டை ஃபேக்டரியிலிருந்து வந்திருப்பவை. இவை குறைவான தரம் கொண்டவை. அவை ஹார்மோன் ஊசிகள் மூலம் வளரப்பட்டவை. ஆகவே அவற்றை பயன்படுத்தாதீர்கள்.
எப்படி கண்டுபிடிப்பது ?
உண்மையில் வெளி ஓட்டைப் பார்த்து கண்டுபிடிப்பது சிரமம்தான். ஆனால் ஒரு த்டவை தெரிந்து விட்டால் பின்னர் அந்த மாதிரியான அளவு நிறம் கொண்ட முட்டையை வாங்காதீர்கள். அல்லது கடையை மாற்றுங்கள்.
வெளிர் பழுப்பு நிறம் ;
அளவு :
நாட்டுக் கோழி முட்டைகள் சிறியதாகத்தான் இருக்கும். பெரிய பிரவுன் முட்டைகள் கலப்படமானவை. அளவு சிறியதாகவும் உள்ளே ஆரஞ்சு நிர மஞ்சள் கரு இருந்தால் நீங்கள் நல்ல தரமான நாட்டுக் கோழி முட்டைகளைத்தான் வாங்க்யிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
தினமும் சாப்பிடலாமா?
தாராளமாக சாப்பிடலாம். சிலர் தினமும் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோ என நினைப்பார்கள். பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். மஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். ஆளுக்கு தகுந்த முட்டை :
சிலர் ஜிம்மில் வோர்க் அவுட் செய்வார்கள். அல்லது கடுமையான பயிற்சி , வேலை செய்வார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு 4 முட்டைக் கூட சாப்பிடலாம். இதனால் அவர்களின் கலோரி வேகமாக எரித்துவிடலாம். ஆனால் கணிணி முன் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிட வேண்டாம்.
பச்சை முட்டை - வேக வைத்த முட்டை எது நல்லது?
நல்ல தரமான மேலே சொன்னபடி இருந்தால் தாராளமாக பச்சையாகவே சாப்பிடலாம் ஆனால் வேக வைத்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் இருமடங்கு கிடைக்கின்றது. ஆகவே அவித்து சாப்பிடுவதால் இன்னும் முழுமையான சத்துக்கள் பெறலாம்.