பாறுக் ஷிஹான்
கல்முனையில் தமிழ் மக்களுக்கு விரோதமான அல்லது பாதகமான தீர்வு எட்டப்படுமானால் அதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ரெலோ உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் கல்முனையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சங்கத்தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஹென்றிமகேந்திரன் மேலும் பேசுகையில்:
இன்று கல்முனையிலிருந்து மக்களுக்கு எதுவுமே தெரிவிக்காமல் கொழும்புக்குச் சென்ற கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் கல்முனை நகரத்தை விற்று விட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எல்லைகள் தொடர்பான தீர்வுக்கான வரைபை இதுவரைமக்கள் அறியவில்லை. எவருக்கும் தெரியாது. .அப்படியெனின் கொழும்பிலிருக்கும் ஒரு சிலருக்காக இந்தத் தீர்வு?

