Ads Area

சம்மாந்துறையில் பொதுஜன பெரமுணவின் தாமரை மொட்டை மலர வைக்கும் பணிகள் துரிதம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பேரம்பேசும் சக்திகள் திகைத்தேறுகின்ற காலநிலை தற்போது இலங்கையை காவுகொண்டுள்ளது. எதிர்வரும் டிசம்பருடன் ஜனாபதித் தேர்தலை நாடு சந்திக்கவுள்ள நிலையில் பிரதான கட்சிகளின் ஈர்ப்பு வல்லமைகள் மிகைக்கின்றன.

அந்த வரிசையில் ‘மொட்டின்’ (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண) பாரிய வலைவீச்சு சம்மாந்துறையில் விழுந்துள்ளாக வட்டாரத் தகவலொன்று உலாவியது. 

அலசிப் பார்த்தபோது,

சம்மாந்துறைக்கு மொட்டின் அமைப்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் நியமிக்கப்படவுள்ள நிலையில், சம்மாந்துறையில் தாமரை மெட்டின் அலுவலகமொன்றும் திறக்கப்படவுள்ளதாம். மேலும், குறித்த நிகழ்வோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினரின் பிரமுகர்களால் கூட்டம் ஒன்றும் ஏற்பாடாக எத்தணிக்கப்பட்டுகின்றதாம்.
இதை யார் அமைக்கிறார்கள் என பார்த்தால்,

முன்னாள் அமைச்சர் அன்வர் இஸ்மாயிலுடன் மிக நெருக்கமாக இருந்து தற்போதை இரு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மிக நெருக்கமாக இருக்கும் சிலரிடமே இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளதாம். (இருமுறை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அத்துடன் 50 பேர் கொண்ட குழுவும் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க திகதி கோரப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது).

நாட்டில் ஆட்சித் தளம்பலுக்கு அப்பால் ஆட்சிப் பரம்பல் எவ்வாறு அமையும் என்ற ஐயம் அனைவரும் மனதிலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த அழைப்புக்கு இவர்கள் மறுப்புத் தெரிவிக்காது தலையசைத்துமுள்ளார்களாம்.
இனி எப்படியோ பாராளுமன்ற உறுப்பினருடன் பிரிந்து நின்றாலும் ஜனாதிபதித் தேர்தலில் சிலர் இணைவது உறுதி! மொட்டு மலர பாரிய அடித்திவாரம் சம்மாந்துறையில் காலூன்றப்படுவதாக நம்பத் தகுந்த தகவல்!!

✍️கியாஸ் ஏ. புஹாரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe