ருஹுணு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பத்தொன்பது மாணவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பகிடிவதைக்குள்ளாக்கிய விவகாரத்தில் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாத்தறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை, கைதானவர்களில் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரும் ஒருவர்.

