அமெரிக்காவில் சட்டமா அதிபராக நியமனம் பெற்ற இலங்கையின் பெருமைக்குரிய பெண்!
அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தில் உதவி சட்டமா அதிபராக இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பெண்ணொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கம்பாஹாவினை பிறப்பிடமாக கொண்ட 42 வயதுடைய நிலுஷி ரணவீர தற்போது மினசோட்டா மாநிலத்தில் வசித்து வருகின்றார்.
கம்பாஹாவின் ஹோலி கிராஸ் கல்லூரியில் தனது கல்வியையும் 2005 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பையும் முடித்தார்.
இதனை தொடர்ந்து அங்கு ஒரு அரசாங்க நீதிபதியின் கீழ் மேலும் சட்டம் கற்றுக் கொண்ட அவர், மினசோட்டா மாநிலத்தில் ஓகஸ்ட் 23 ஆம் திகதி உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை பெற்றுக்கொண்டதன் மூலம் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.