இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வீட்டுக்கு, தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் சென்ற விவகாரம் குறித்து, அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழில் கத்தி, ரெமோ, எதிர்நீச்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சதீஷ். இவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வீட்டுக்கு சென்று, பார்வையிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.