பற்களைப் பராமரிப்பதில் பலருக்கும் அலட்சியம் இருக்கலாம். அப்படி பற்களைத் துலக்குவதிலும், பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டினால் 75 சதவீதம் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் குயின் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 4,69,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்களில் 4,069 பேருக்கு புற்றுநோய் செல்கள் உருவாவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு கல்லீரல், பெருங்குடல், மலக்குடல் மற்றும் கணைய புற்றுநோய், இரைப்பைக் குடல் உள்ளிட்ட உறுப்புகளில் புற்றுநோய் உருவாகியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களை ஆறு வருடங்களாக கண்காணித்து இந்த ஆய்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
புற்றுநோய் மட்டுமல்லாது, இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களும் உண்டாகும் என ஆராய்ச்சியாளர் ஹைடீ WT ஜோர்டாவோ கூறியுள்ளார்.
மேலும் அவர், கல்லீரல் என்பது பாக்டீரியாகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. ஆனால் கல்லீரலையே தாக்கும் ஹெபடிடிஸ் சிரோசிஸ் , புற்றுநோய் செல்கள் நுழைந்தால் அவை கல்லீரலிலேயே தங்கி அரிக்கத் தொடங்கு எனக் கூறியுள்ளார்.