Ads Area

இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலகம்.



நன்றி - காரைதீவு சகா.

இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலகம்.

சம்மாந்துறை வலையக் கல்வி அலுவலகத்தில் வருடாந்த வாணி விழா அண்மையில் வலையக் கல்வி அலுவலக கணக்காளர் சீ. திருப்பிரகாசம் அவர்கள் தலைமையில் அண்மையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வலையக் கல்வி அலுவலக பணிப்பாளர் திரு. சஹிதுல் நஜீம் அவர்களை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்கள்.

இந் நிகழ்வில் சம்மாந்துறை வீரமுனை சிவஸ்ரீ நிமலேஸ்வரக் குருக்களின் விசேட பூஜையும் இடம் பெற்றதோடு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. 


இந்து சகோதரர்களின் வாணி விழா நிகழ்வானது ஒவ்வொரு வருடமும் சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலகத்தில் தவறாது நிகழ்வது சிறந்த இன நல்லுறவுக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe