Ads Area

தொழிலாளர்களின் சம்பளம் தாமதம் ; 20 மில்லியன் றியால் செலுத்தும்படி உத்தரவிட்ட சவுதி Labor Court.

தொழிலாளர்களின் சம்பளம் தாமதம் ; 20 மில்லியன் றியால் செலுத்தும்படி உத்தரவிட்ட சவுதி தொழிலாளர் நீதி மன்றம் - Labor Court. 

சவுதி அரேபியாவில் தொழிலாளர் நீதிமன்றம் அந் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 20 மில்லியன் சவுதி றியால்களை அந் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.  

குறித்த  நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை, அவர்களது சம்பளங்களை தாமதப்படுத்தியமை, ஊழியர்களுக்கு அதிக நேர வேலைகள் வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரித்த சவுதி அரேபிய தொழிலாளர் நீதிமன்றம் இவ் உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கானது வெறும் 23 நாட்களுக்குல் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் வேலை செய்த 8 நாடுகளைச் சேர்ந்த 258 தொழிலாளர்களுக்கே இவ்வாறு நீதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் http://saudigazette.com.sa





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe