Ads Area

VR தொழில்நுட்பத்தில் தனது இறந்த மகளைச் சந்தித்து உள்ளம் பூரித்தழுத தாய் ( வீடியோ இணைப்பு)

VR தொழில்நுட்பத்தில் தனது இறந்த மகளைச் சந்தித்த தாய்! மகளைக் கண்டு உள்ளம் பூரித்தழுத தாய் ( வீடியோ இணைப்பு)

கனவிலோ, நிழல் உலகிலோ இறந்துவிட்ட அன்புக்குரிய சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், நம்மில் எத்தனை பேர் அதைத் தவறவிடுவோம்?

கண்டறியப்படாத ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு 2016-ஆம் இறந்துவிட்ட தனது மகளை வி.ஆர் ( Virtual Reality) தொழில்நுட்பம் மூலமாக தனது மகளைச் சந்தித்த நிகழ்வை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You" திரைக்குழு. கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனம், சிறுமி நயோனின் உருவத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக வடிவமைத்துள்ளது.

சிறப்பு கையுறை அணிந்து, தன் மகளின் நிழலைப் பார்க்கும் தாய் ஜாங்-ஜி-சங், மகள் நேயோனை தொட முயற்சிக்கிறார். இந்த அனுபவத்தைத் குறித்து தெரிவித்த ஜாங், “இது எனது கனவு. அந்த கனவை நான் வாழ்ந்துவிட்டேன்” என்கிறார்.

நெகிழ்ச்சியான இந்த சம்பவத்துக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், உளவியல் ரீதியாக இது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்யாமல், இதை ஊக்குவிப்பது சரியானதல்ல என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe