சக்தி தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்,
“தேர்தலுக்கு முன்பு வீ.சி இஸ்மாயிலுக்கு எந்தவிதமான தேசியப்பட்டியல் வாக்குறுதியையும் வழங்கியிருக்கவில்லை. கடந்த 52 நாள் பிரச்சினையின் போது வீ.சி இஸ்மாயில் பிரதி அமைச்சை பாரமெடுத்திருந்தார்.அதற்கான வீடியோ ஆதாரம் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. நான் ஜனாதிபதியோடு காரசாரமாக பேசி திருப்பியனுப்ப வைத்திருந்தேன். மீண்டும் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டு கட்சியோடு இணைந்திருந்தார். இதனை உயர்பீடத்தில் பேசி, அவரை அகௌரவப்படுத்தக் கூட நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

