பாறுக் ஷிஹான்.
வீடொன்றில் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திற்கு கடந்த 11 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருட்கள் பொதி செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து நிந்தவூர் பகுதியில் உள்ள கடற்கரைப்பகுதி வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டது.
இதன் போது குறித்த சோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா உப பொலிஸ் பரிசோதகர் ஜனுசன் உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினர் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டின் உள்ளே கெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த 3 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.