(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி செயலாளர் எம்.எம்.ஆசீக், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டக்டர் எம்.எச்.எம்.ஆஷாத், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஹுசைனா பாரிஸ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.மஜீட், நம்பிக்கையாளர் சபை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொலிஸ், இராணுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.