Ads Area

கொரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பிய 74 வயது சென்னை பாட்டி...!.

தமிழகத்தில் இன்று 48 பேர் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  மேலும், இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.


மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 679 பேருக்கு ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.

இன்று கொரோனா தொற்று உறுதியானவர்களில் 42 பேருக்கு ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. 4 பேருக்கு, எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகம் தற்போது வரை இரண்டாம் கட்டத்தில்தான் உள்ளது. மூன்றாம் நிலைக்கு செல்ல கூடாது என செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆன மூதாட்டி 74 வயதானவர். சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பொழிச்சூரைச் சேர்ந்தவர் ஆவார்.கடந்த மாதம் 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடட்ற சர்க்கரை வியாதி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வீடு திரும்பிய மூதாட்டிக்கு மருத்துவர்கள் மலர்க்கொத்து மற்றும் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe