உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் 50கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவர் என்று ஆக்ஸ்பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆக்ஸ்பார்ம் நிறுவனம் கென்யா நாட்டின் நைரோபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கொரோனாவின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “பெருகிவரும் பொருளாதார நெருக்கடியில் 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார நெருக்கடியைவிட ஆழமானது. 1990ஆம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக உலகில் வறுமைநிலை அதிகரிக்கக்கூடும். சில நாடுகள் 30 வருடங்கள் பின்நோக்கி செல்லும்”என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நாளுக்கு 5.50டொலருக்கு கீழ் வருவாய் ஈடுபவர்களின் எண்ணிக்கை 400 கோடியாக உயரக்கூடும் என்று ஆக்ஸ்பார்ம் அறிக்கை சொல்கிறது.