இலங்கையில் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுகை தொடர்பில் சில அரசாங்க அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
நோய்த் தொற்று பரவுகையின் பிரதான காவிகளாக முஸ்லிம்கள் இருப்பதாக குற்றம் சுமத்தி அந்த சமூகம் மீது களங்கம் கற்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடலை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.