(நூருல் ஹுதா உமர்)
கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக அன்றாட வருமானத்தை இழந்த மக்களின் பசியை போக்கும் வகையில் கல்முனை வர்த்தக சங்கம் சுமார் 7 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியினை கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து அறவிடுசெய்து கல்முனை பிரதேசத்தில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு இன்று வழங்கி வைத்தனர்
மேலும் கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அங்குள்ள 19 பள்ளிவாசல்களின் ஊடாக இன்று (6) நிவாரணத்திற்கான நிதி வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் கே.எம் சித்தீக் அவர்களின் தலைமையில் கல்முனை மாநகர சபை சபா மண்டபத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.