Ads Area

கண்ணிவெடி அகற்றும் பணியின் போது துப்பாக்கியுடன் காணப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினரின் இறந்த உடல்.

முகமாலை பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார். நேற்று பிற்பகல் குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கியும் காணப்பட்டதுடன், விடுதலைப்புலிகளின் சீருடையும் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுற்ற நிறுவன ஊழியர்களால் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் குறித்த விடயத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதி கோரியிருந்தனர். குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மனித எச்சங்கள் பெண்களினுடையதாக இருக்கலாம் எனவும், அவை விடுதலைப்புலிகளினுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

அடையாளம் காணப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதி எனவும் குறிப்பிடப்படுகின்றது.

TamilWin







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe