(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இம்முறை நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நிந்தவூர் கமு/அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 6 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார்.
எம். யூ. அஸ்பி அஹ்மத், எம்.ஐ.எம். இஸ்பாக், ஆர். அப்துல்லாஹ் உமைர், கே. ஜனுஸிகா, ஏ. சதாப் ஸியான், எம்.எப். பாத்திமா ஹனான் ஆகிய மாணவர்களே 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களாவர்.
எஸ்.பி. அக்தர், எம்.டி.எம்.எம்.ஆர். அன்ஸிப், எம்.எஸ்.அப்ரின் அனா, வை.எம். ஹிஷாம், எம்.ஏ.ஏ. அகாஷ் முகம்மட், எம்.ஜே.குல்னாஸ் பேகம் ஆகியோர் 8 ஏ பெற்றுள்ளதோடு, ஏ. பைஹான் அஹமட், எம்.என்;.எம். நுபைஸ், எம்.எல். சஜீலா ஹனீன், பீ.எப். சபீஹா, எம்.ஜே.ஏ. அஹ்மத் பத்தி ஆகியோர் 7 ஏ சித்தியும், எம்.எம்.கே.எப். ஷைபா, எப். அஷ்ரா பாத்திமா, ஏ.ஜே. அப்ஷர் அஹ்மத் ஆகியோர் 6 ஏ சித்தியும், எம்.வை.எம். ஆதிப், ஏ. பஹத், எச். அஸ்ஜத் அலி, எஸ்.ரீ. ரஹுமான், எம்.கே.எப். சாகிலா, எஸ்.என். துரிய்யா, எம்.என்..எப். நுஹா ஆகிய மாணவர்கள் 5 ஏ சித்தியும் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு காரணமாக இருந்த மாணவர்கள், அதன் பெற்றோர்கள், மற்றும் பகுதித் தலைவர் ஏ. இப்திகார் அஹமட், உதவி பகுதித்தலைவர், பிரதி, உதவி அதிபர்கள், வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், கல்லூரி அபிவிருத்திக் குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட பாடசாலை சமூகத்தவர் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர் கபூர் நன்றிகளைத் தெரிவித்ததோடு, சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.