அபு ஹின்ஸா
முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும் நீண்டகாலமாக ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராகவும் இருந்த எம்.எம்.எம்.முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் "மயோன் உதவும் கரங்கள் வேலை திட்டத்தின்" ஒரு பகுதியாக கரையோர பிரதேச கடற்கரை பகுதிகளில் குழாய் கிணறு பொருத்தும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்பக் கட்டமாக பத்துக்கும் மேற்பட்ட குழாய் கிணறுகளை வழங்கும் வகையில் நேற்று முதலாவது குடிநீர் பொருத்தும் பணி இடம்பெற்றது.
இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலான திகாமடுல்ல வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்.