தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை தொடர்ந்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் திணைக்களத்தின் பணிகளை ஆரம்பித்துள்ள போதிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
எனினும் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள், சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளுதல், கடவுச்சீட்டு விண்ணப்பம் ஆகிய தேவைகள் காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.