Ads Area

கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணம் வைத்து கொடுத்த நபர் நான் அல்ல - நடிகர் அமீர் கான்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15000 வைத்து கொடுத்த நபர் நான் அல்ல என்று நடிகர் அமீர் கான் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது.

இதனிடையே இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு நடிகர் அமீர்கான் ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட் கொடுத்து உதவியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அந்த ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூ.15 இருந்ததாகவும் தகவல்கள் பரவின. எனவே நூதனமுறையில் மக்களுக்கு உதவி செய்ததாகக் கூறி பலரும் அமீர் கானுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.



இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் அமீர் கான், கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணம் வைத்து கொடுத்த நபர் நான் அல்ல. அது முழுக்க போலியான கதை அல்லது அந்த ராபின் ஹூட் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என விருப்பப்பட்டிருப்பார். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe