Ads Area

கொறோனா வைரஸ் காரணமாக மத்திய கிழக்கில் இதுவரை 23 இலங்கையர்கள் உயிரிழப்பு.


கொறோனா வைரஸ் காரணமாக மத்திய கிழக்கில் 23 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 23 இலங்கையர்கள் கடந்த 3 மாதங்களில் கோவிட் 19 காரணமாக இறந்துள்ளனர்.



ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 8  பேரும், குவைத்தில் இருந்து 7 பேரும், ஓமானில் இருந்து 2 பேரும் சவுதி அரேபியாவில் இருந்து 6 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.



இவர்களின் இறுதி சடங்குகள் அந்தந்த நாடுகளில் கோவிட் 19 சுகாதார வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டன.

செய்தி மூலம் : http://www.dailymirror.lk
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.


CountryTotal COVID-19 deaths since March
UAE8
Kuwait7
Saudi Arabia6
Oman2
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe