Ads Area

அபுதாபியில் இந்தியர் ஒருவருக்கு 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத் தொகை.

புதன்கிழமை நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபி ரேஃபில் டிராவில் இந்தியர் ஒருவருக்கு 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசாகக் கிடைத்திருக்கிறது. அஜ்மானில் வசிக்கும் இந்தியரான அசைன் முஷிப்புரத் (Assain Muzhippurath) தான் அந்த அதிர்ஷ்டசாலி.



கொரோனா காரணமாக காணொளி காட்சியாக நடைபெற்ற பிக் டிக்கெட் டிராவின் நேரலையை, அந்நேரத்தில் வேலையிலிருந்த அசைனால் பார்க்க இயலவில்லை.

அவருடைய இந்த வெற்றி குறித்து தகவல் தெரிவிக்கையில் “மாஷா அல்லா. நன்றி. நான் பணியில் இருக்கிறேன்” என போனில் எவ்வித மகிழ்ச்சியும் இல்லாமல் பேசியிருக்கிறார் அசைன். நிச்சயமாக யாரோ குறும்பு செய்வதாக அவர் நினைத்திருக்கக்கூடும்.

தற்போது அசைன் தகவலறிந்து தனது ஜாக்பாட் பரிசுக்காக பிக் டிக்கெட்டின் அதிகாரியான ரிச்சடிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.



மே 14 அன்று அசைன் 139411 என்னும் எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe