நூருல் ஹுதா உமர்
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியனவற்றின் வேட்பாளர்கள் தற்போது பிரசார நடவடிக்கைகளை பிரதேசங்கள் தோறும் முடுக்கி விட்டுள்ளனர்.
இதே வேளை தேர்தல் விதிமுறைகள் மீறப்படும் சந்தர்ப்பம் குறித்து பொலீஸார் அதிக கவனம் செலுத்தி வருவதுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓட்டப்பட்டுள்ள சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.