Ads Area

துபாய் பாலைவனத்தில் தோண்டத் தோண்ட மதுபான போத்தல்கள்.

துபாய் பாலைவனத்தின் நடுவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 மதுபான போத்தல்களை துபாய் காவல் துறையினர் அதிரடியாக கைப்பற்றியுள்ளார்.

அண்மையில் ஈத்  அல் பித்ர் விடுமுறையின் போது துபாய் காவல்துறையால் நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் 1,483 மதுப் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன இதனோடு சம்பந்தப்பட்ட  ஏழு பேர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

டுபாய் ஜெபல் காவல் நிலையத்தின் இயக்குனரான அடேல் முகமது அல் சுவெய்தி (Adel Mohamed Al Suweidi) இது தொடர்பாக பேசுகையில்,” 

பாலைவனத்திற்கு நடுவே இருந்த குழிக்குள் பெரும்பான்மையான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன”  காவல் துறையினரால் நடத்தப்பட்ட முதலாம் சோதனையின் போது மூன்று ஆசிய இளைஞர்கள் குழிக்குள் இருந்த மரப்பெட்டியிலிருந்து மதுப் பாட்டில்களை எடுத்துக்கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர். பெட்டியுனுள் 24 பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருந்த 1,110 போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அல் சுவெய்தி தெரிவித்தார்.

இரண்டாம் பரிசோதனையின் போது மதுப் போத்தல்களை தங்களது காரில் கடத்திச்சென்ற இரண்டு ஆசிய ஆண்களை கைது செய்திருக்கிறது காவல்துறை. இதுகுறித்து காவல் துறைக்குக் கிடைத்த ரகசிய தகவல் மூலம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.தப்பிக்க எத்தனித்தவர்களை துரத்திச் சென்று கைது செய்து அவர்களிடம் இருந்த 115 மதுப் போத்தல்களைக் கைப்பற்றி இருக்கிறது காவல்துறை.

தொழிலகங்கள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு பாதுகாப்பு பரிசோதனையின் போது சந்தேகத்திற்குரிய காரில் இருந்து 258 மதுப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அல் சுவெய்தி தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe