Ads Area

வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர பல மடங்கு கட்டணங்களை அறவிடும் ஸ்ரீலங்கன் விமான சேவை.

கொரேனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக பல நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அநீதியான முறையில் அதிக கட்டணங்களை அறவிடுவதால், வெளிநாடுகளில் உள்ள இவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சில விமானப் பயணங்களுக்காக சாதாரண கட்டணத்தை விட நான்கு மடங்கு அதிகமாக கட்டணங்களை அறிவிட்டு வருகிறது. இதனடிப்படையில், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இருந்து கொழும்புக்கு பயணிக்க 2 ஆயிரத்து 200 டொலர்கள் அறவிடப்படுவதுடன் லண்டனில் இருந்து கொழும்புக்கு 2 ஆயிரத்து 200 பவுண்கள் கட்டணமாக அறவிடப்படுகிறது. லெபனானில் இருந்து கொழும்புக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறவிடப்படுகிறது.

தற்போது இலங்கை திரும்பும் பலர் கடந்த சில மாதங்களாக தாம் தங்கியிருந்த நாட்டில் வேலை வாய்ப்பின்றி இருந்தவர்கள். உலகில் உள்ள ஏனைய நாடுகள் வெளிநாடுகளில் சிக்கியிருந்த தமது நாட்டவர்களை இலவசமாக தத்தமது நாடுகளுக்கு அழைத்து வந்துள்ளன. எனினும் இலங்கையின் தேசிய விமான நிறுவனமாக தற்போதைய சந்தர்ப்பதிலும் பணத்தை குறித்தே சிந்திப்பதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இதனிடையே பணத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தீர்மானங்களை எடுக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தற்போதை முகாமைத்துவம், ஆயிரத்து 500 ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பி வைத்துள்ளது.

சில தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் உரிமைகளை காட்டிக்கொடுத்து விட்டு, முகாமைத்துவத்திடம் சாதகங்களை பெற்றுக்கொண்டு, முகாமைத்துவம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் இணங்கும் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe