டெல்லியில் பாத்ரூமுக்கு போன 14 வயசு பொண்ணை ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்.. இந்த சம்பவம் கொரோனா வார்டிலேயே நடந்துள்ளது.. பாதிக்கப்பட்ட பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியும் தொற்று பாதித்தவர், அவரை சீரழித்த அந்த கயவனும் தொற்று பாதித்தவர்தான்.. டெல்லியில் இந்த கொடுமை நடந்துள்ளது! டெல்லியின் சத்தார்பூரில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை நல மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.. ஆளுனர் அனில் பைஜால் முன்னிலையில், இந்த மாசம்தான் இந்த மையம் துவக்கி வைக்கப்பட்டது.
இங்கு ஒரு சிறுமிக்கு தொற்று பாதிப்பு இருந்துள்ளது.. 14 வயசுதான்.. அதனால் இந்த மையத்தில் சிகிச்சையும் எடுத்து கொண்டு வந்திருக்கிறார்.. இந்த சமயத்தில், சிறுமி பாத்ரூமுக்குள் சென்றுள்ளார்... இதை பார்த்த மற்றொரு கொரோனா பாதித்த நோயாளி பின்னாடியே சென்று, அந்த பாத்ரூமிலேயே கற்பழித்து உள்ளார். அவருக்கு வெறும் 19 வயசுதானாம். இவர்கள் இருவருமே குடிசை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.. குடிசை பகுதி என்பதால் தொற்று எளிதாக பரவியிருக்கிறது போலும்.. அதனால் 2 பேருமே தங்கள் தங்கள் சொந்தக்காரர்களுடன் இதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாத்ரூமில் தனக்கு ஏற்பட்ட நிலைமை பற்றி உறவினர்களிடம் சொல்லி சிறுமி அழுதிருக்கிறார்.. இதில் இன்னொரு கூட்டாளிக்கும் தொடர்பு இருந்துள்ளது.. இதையடுத்துதான் இந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்து ஜெயிலில் தூக்கி வைத்துள்ளனர். இப்போதெல்லாம் கொரோனாவைவிட, இந்த காமூகன்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.. 4 நாளைக்கு முன்புகூட, கொரோனா மையத்தில் ஒருவர், தொற்று பாதித்த 40 வயசு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.. அதேபோல, தொற்று இருக்கிறதா என்று செக் செய்கிறேன் என சொல்லி, 14 வயது சிறுவனின் டிரஸ்ஸை கழட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் ஒருவர்.. ஆனால் அவர் வெள்ளை கோட் அணிந்து கொண்டு, தன்னை ஒரு டாக்டர் என்றும் சொல்லி கொண்டாராம். இப்படி கொரோனா மையத்திலேயே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. நேற்றுகூட, உபியின் அலிகார் நகரில் உள்ள தீன்தயாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் நோயாளியை டாக்டர் ஒருவர் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம்? சில தனிமைப்படுத்தப்படும் முகாம்கள் வீடுகள் போல இருக்கிறது என்று பரவலாக சொல்லப்படுகிறது.
நோயாளிகள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு தனி தனி ரூம்கள் போல ஒதுக்கப்பட்டுள்ளது.. இதைதான் இந்த காமுகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.. கொரோனா சிகிச்சை மையங்களிலும் சரி, முகாம்களிலும் சரி, தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது.. சிசிடிவி போன்றவைகளை பொருத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது!!