தகவல் - அமீர் முஹம்மட்.
சம்மாந்துறை இர்ஷாட் ஏ. காதர் நற்பணி மன்றத்தினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவிற்குத் தேவையாகவிருந்த நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்காக சுமார் 30000 மருந்து பக்கட்களை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஷாத் ஹனீபா அவர்களி்டம் வைத்தியசாலை ஊழியர்கள் முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டன.
அத்துடன் ஒரு தொகுதி தெம்பிலி இன தென்னங் கன்றுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதையும் நட்டும் வைத்தனர்.