கத்தாரில் எதிர்வரும் நாட்களில் புழுதியுடன் கூடிய வெப்பநிலை அதிகரிக்கும் என கத்தார் வானிலை ஆய்வுத்துறை தகவல்.
கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) இந்த வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், கத்தாரில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் என்றும், லேசான தூசி காற்றுடன் கூடிய வெப்பநிலை இருக்கும் என்றும், பகல் நேரங்களில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
இந்த வெப்பமான காலநிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கத்தார் வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், குழந்தைகளை வாகனத்தில் கவனிக்காமல் விட்டுச் செல்லக்கூடாது என பெற்றோருக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. வெளிப்புற தொழிலாளர்கள் நிழலில் ஓய்வு எடுக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளது.