Ads Area

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு மிக முக்கியம் - உவைஸ் ஹாஜியார்.

(சில்மியா யூசுப்)

எதிர் வரும் 05 ம் திகதி நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என  முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார்.

நேற்று 18ம் திகதி கம்பளை  பிரதேசத்தில்  நடைபெற்ற கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சி சார்பில் இலக்கம் 7 இல் போட்டியிடும் அல் ஹாஜ் ALM fபாரிஸ் அவர்களை ஆதரித்து வெற்றியை உறுதி செய்வதற்கான  பொதுக்கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில், கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டுயிடும்  A.L.M. பாரிஸ் அவர்களுக்கு மக்கள் தங்கள் ஆதரவுகளை வழங்கிக்கொண்டிருக்கின்றனர். எனவே கண்டி மாவட்ட மக்கள் தமக்கான ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை  பெற்றுக் கொள்வதில் நாம் உறுதியாய்  இருக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றதன் பின்னர் நாடு ஒரு சிறந்த நிலையில் பயணித்து கொண்டிக்கிறது. இனியும் இவ்வாறே பயணிக்க  எமது வாக்குகளை ஏனைய கட்சிகளுக்கு வழங்கி மீண்டும் இனவாதத்தினை ஏற்படுத்தி , பிரச்சினைகளை தூண்டாமல்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சிறுபான்மையினர் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

மேலும் இனியும் நாம் பிரிந்து செல்லாமல் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன கட்சியானது இம்முறையும் தேர்தலில் வெற்றிபெறும். எனவே சிறுபான்மையினர் மிக கவனமாக சிந்தித்து  தங்களது வாக்குகளை வழங்குங்கள் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில்  ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி அவர்கள், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரிஸ்  மற்றும் ஏனைய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe