இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலும் தடை நீட்டிப்பு..!!
இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இன்றுடன் முடிவடையவிருக்கும் நிலையில், தற்பொழுது ஆகஸ்ட் 31 ம் தேதி வரை விமானப்போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு தற்பொழுது ஆகஸ்ட் மாதம் இறுதி வரையிலும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி - www.khaleejtamil.com