Ads Area

2020 ஆம் ஆண்டுக்கான திறந்த பல்கலை. சட்டமாணி (LLB) பட்டப்படிப்பினை தொடர்வதற்கான நுழைவுப் பரீட்சை விண்ணப்பம் கோரல்.

2020 ஆம் ஆண்டுக்கான திறந்த பல்கலைக்கழக சட்டமாணி (LLB) பட்டப்படிப்பினை தொடர்வதற்கான நுழைவுப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேற்று முதல் 13-09-2020 முதல் இணையத்தளத்தின் மூலம் Online வழியாக அதற்கு விண்ணப்பிக்க முடியும் என, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தகைமைகள்:

க.பொ.த. உயர் தரப் பரீட்சை பழைய பாடத்திட்டத்திற்கு அமைய 4 பாடங்களில் அல்லது புதிய பாடத்திட்டத்தில் 3 பாடங்களில்  ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அல்லது இலங்கை கல்வித் தகைமை மட்ட நியமத்தில் (SLQF) மட்டம் 2 இல்  30 பாடநெறி புள்ளிகள் அல்லது அதற்கு மேல் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட வழக்கறிஞர் (Attorney-at-Law) ஆக இருத்தல் அல்லது அதற்கு சமனான அல்லது அதிலும் அதிக அங்கீகரிக்கப்பட்ட தகைமையை கொண்டிருத்தல்

(சட்ட வழக்கறிஞர் ( Attorney-at-Law) தகைமையை கொண்டிருப்பவருக்கு நுழைவுப் பரீட்சை எழுதுவது அவசியமில்லை என்பதோடு, அவர் 4ஆம் மட்டத்திற்கு நேரடியாக தகுதி பெறுவார், ஆயினும் இம்முறை 3ஆம் மட்டத்திலிருந்தே (1ஆவது வருடம்) பாடநெறி ஆரம்பிப்பதால் அவர் அடுத்த வருடத்திலிருந்தே இணைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது)

இம்முறை நுழைவுப் பரீட்சைகள் பின்வருமாறு அமையவுள்ளன.

• உணர்வாற்றல் (தமிழ்/ சிங்களம்) (1 ½ மணித்)
• ஆங்கில மொழி (1 ½ மணித்)
• பொது நுண்ணறிவு (1 மணித்)

ஒவ்வொரு பரீட்சையும் 100 புள்ளிகளைக் கொண்டிருக்கும் என்பதோடு, மொத்தமான 300 புள்ளிகளில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் பாடநெறிக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

பரீட்சைகள் இடம்பெறும் இடங்கள்:

கொழும்பு, மாத்தறை, கண்டி, அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குருணாகல், பதுளை, இரத்தினபுரி, ஆகிய பிராந்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

பாடநெறிகள் இடம்பெறும் மொழிகள்

சட்டமாணி பாடநெறியின் அறிவுறுத்தல்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அமையும். முதலாம் வருடத்தில் (3ஆம் மட்டம்) சட்ட பாடநெறிகளுக்கான அறிவுறுத்தல்கள் தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் அமையும்.
பாடநெறிக்கான அனைத்து விடயங்கள் மற்றும் இணைப்புகள் யாவும் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்படும்.

காலப் பகுதி:

4 வருடங்கள்; ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவங்களை (Semester) கொண்டிருக்கும். மாணவர் ஒருவர் தாம் பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டு, பதிவு செய்த தினத்திலிருந்து 12 கல்வி ஆண்டுகளுக்குள் பாடநெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்ப ஆரம்ப திகதி: செப்டெம்பர் 13, 2020
விண்ணப்ப முடிவுத் திகதி: ஒக்டோபர் 13, 2020
நுழைவுப் பரீட்சை திகதி: டிசம்பர், 2020

பரீட்சைக் கட்டணம்: ரூ. 2,000

விண்ணப்பிக்க - https://reginfo.ou.ac.lk/applyonline/
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe